Sunday, May 31, 2009

51. தெரிந்து தெளிதல்

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
(501)
விளக்கம்:

அறம், பொருள், இன்பம், தன் உயிருக்கு அச்சம் என்னும் நான்கினது வகையாலும் ஆராய்ந்தே, ஒருவன்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.


குடிபிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பிரியும்
நாணுடையான் கட்டே தெளிவு.
(502)
விளக்கம்:

நல்ல குடியிலேயே பிறந்து, குற்றங்கள் இல்லாதவனாய், பழிச்சொல் வரக்ணாடாதென்று அஞ்சும் மானணிள்ளவனிடத்திலேயே நம்பிக்கை வைக்க வேண்டும்.

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
(503)
விளக்கம்:

அருமையான நூல்களைக் கற்று, குற்றங்கள் எதுவும் இல்லாவரிடத்தில் ஆராய்ந்தால், அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.

குணம்நாடி குற்றணிம் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல்.
(504)
விளக்கம்:

ஒருவனது குணங்களையும், குற்றங்களையும் ஆராய்ந்து, அவை இரண்டினுள் மிகுதியானவற்றைத் தெரிந்து, அதற்குத் தகுந்தபடியே அவனைக் கொள்ள வேண்டும்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
(505)
விளக்கம்:

ஒருவர் தாம் அடையும் பெருமைக்கும், மற்றொருவர் தாம் அடையும் சிறுமைக்கும், அவரவர்களின் செயல்களே தகுந்த உரைகல் ஆகும்.

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
(506)
விளக்கம்:

உலகப்பற்று இல்லாதவரை நம்ப வேண்டாம்; அவர் பற்றில்லாதவர்; அதனால் பிறர் கூறும் பழிச்சொல்லுக்கு வெட்கப்பட மாட்டார்கள்.

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாம் தரும்.
(507)
விளக்கம்:

அறிய வேண்டியவைகளை அறியாத ஒருவரைத் துணையாக, அன்புடைமை காரணமாகத் தேர்ந்து கொண்டால், எல்லாவகையான அறியாமையையும் அது தரும்.

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
(508)
விளக்கம்:

தெளிவாக ஆராயாமல் ஒருவனைத் துணையாக நம்பியவனுக்கு, அவனுக்கு மட்டுமின்றி அவன் வழிமுறையில் வருபவர்களுக்கும் தீராத துன்பம் உண்டாகும்.

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
(509)
விளக்கம்:

ஆராயாமல் யாரையுமே நம்புதல் வேண்டாம்; ஆராய்ந்து நம்பியதன் பின்னால், அவர் சொல்லும் பொருள்களை நல்லவையாகவே நம்புதல் வேண்டும்.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்.
(510)
விளக்கம்:

ஒருவனைப் பற்றி ஆராயாமல் நம்புவதும், அப்படி ஆராய்ந்து நம்பியவனிடத்திலே சந்தேகம் கொள்ளுவதும் தீராத துன்பத்தையே தரும்.

No comments:

Post a Comment