Sunday, May 31, 2009

112. நலம் புனைந்து உரைத்தல்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
(1111)
விளக்கம்:

அனிச்ச மலரே! நீதான் நல்ல சிறப்பை உடையாய், நீ வாழ்க, எம்மால் விரும்பப்படுகின்றவளோ நின்னெக் காட்டிலும் மிகவும் மென்மையான தன்மையினள்.


மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.
(1112)
விளக்கம்:

இவள் கண்களும் பலராலும் காணப்படும் இக்குவளெப் பூவைப் போன்றதாகுமோ என்று, இக்குவளெ மலரைக் கண்டால், நெஞ்சே, நீயும் மயங்குகின்றாயே .

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு.
(1113)
விளக்கம்:

அவளுக்கு, மேனியோ தளிர் வண்ணம்; பல்லோ முத்து; இயல்பான மணமோ நறுமணம்; மையுண்ட கண்கள் வேல் போன்றவை; தோள்களோ மூங்கில் போன்றவை

காணிற் குவளெ கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.
(1114)
விளக்கம்:

குவளெ மலர்கள், இவளெக் கண்டால், இம் மாணிழை கண்களுக்கு யாம் ஒப்பாக மாட்டோம் என்று தலெயைக் கவிழ்ந்து நிலத்தை நோக்குமே.

அனிச்சப்பூக் கால்களெயால் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.
(1115)
விளக்கம்:

தன் இடையின் நுண்மையை நினெயாதவளாய், அனிச்ச மலரைக் காம்பு களெயாமல் கூந்தலிலே சூடியுள்ளாளே இவள் இடைக்கு இனி நல்ல பறைகள் ஒலிக்கமாட்டா.

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்.
(1116)
விளக்கம்:

மதிதான் யாதென்றும், இம் மடந்தையது முகந்தான் யாதென்றும் வேறுபாடு அறியாமையால், வானத்து மீன்கள் தம் நிலெயில் நில்லாது கலங்கிப் போயினவே.

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.
(1117)
விளக்கம்:

அவை கலங்குவதுதாம் ஏனோ? தேய்ந்து, பின்னர் வளர்ந்து நிறைவாகும் ஒளியுள்ள மதிக்கு உள்ளதுபோல, இவள் முகத்திலும் களங்கம் யாதும் உண்டோ?

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லெயேல்
காதலெ வாழி மதி.
(1118)
விளக்கம்:

மதியமே, இப் பெண்ணின் நல்லாளின் முகத்தைப்போல நீயும் ஒளிவிடுவதற்கு வல்லமை உடையையானால், நீயும் என்னால் காதலிக்கப்படுவாய், நீதான் வாழ்க.

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.
(1119)
விளக்கம்:

மதியே! இம்மலர் போலும், கண்ணினையுடையவள் முகத்திற்கு நீ ஒப்பாக விரும்புவாய் ஆயின், இம்முகத்தைப் போல யான் மட்டும் காணத் தோன்று! பலரும் காணும்படி தோன்றாதே !

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
(1120)
விளக்கம்:

மிகமிக மென்மையான அனிச்ச மலர்களும், அன்னப் பறவைகளின் மெல்லிய இறகுகளும், இம் மாதின் அடிக்கு நெருஞ்சிப் பழம்போலத் துன்பத்தைச் செய்யுமே!

No comments:

Post a Comment