Sunday, May 31, 2009

115. அலர் அறிவுறுத்தல்

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனெப்
பலரறியார் பாக்கியத் தால்.
(1141)
விளக்கம்:

ஊரிலே பழிச்சொல் எழுந்தும் என் உயிர் இன்னும் போகாது நிற்கின்றது; அஃது என் நல்வினெயின் பயனால்தான் என்பதைப் பலரும் அறிய மாட்டார்கள்.


மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
(1142)
விளக்கம்:

குவளெ மலரைப்போன்ற கண்களை உடையவளான இவளின் அருமையைப் பற்றி அறியாமல், இவளெ எளியவளாகக் கருதி, இவ்வூரவர் அலரினெத் தந்தார்களே

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனெப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
(1143)
விளக்கம்:

ஊர் அனைத்தும் அறிந்த இப் பழிச்சொற்கள் அவனெயும் சென்று சேராதோ. சேருமாதலால், அதனெப் பெறாதைப் பெற்றாற் போன்றதாகவே யானும் கொள்வேன்.

கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.
(1144)
விளக்கம்:

ஊரார் உரைக்கும் பழிச்சொற்களாலே காமநோயும் நன்றாக மலர்கின்றது. அதுவும் இல்லெயானால், என் ஆசையும் தன் மலர்ச்சியில்லாமல் சுருங்கிப் போய்விடுமே.

களித்தோறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படும் தோறும் இனிது.
(1145)
விளக்கம்:

களிக்குந்தோறும் களிக்குந்தோறும் மேன்மேலும் கள்ளுண்டலெ விரும்பினாற்போல, காமமும், அலரால் வெளிப்பட வெளிப்பட, மேலும் இனிமையாகின்றது.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களெப் பாம்புகொண் டற்று.
(1146)
விளக்கம்:

அவரைக் கண்டது எல்லாம் ஒரே ஒரு நாள்தான்; திங்களெப் பாம்பு கொண்டது எங்கும் பரவினாற்போல, ஊரலரும் அதற்குள் எங்கும் வெளிப்பட்டுப் பரவிவிட்டதே.

ஊரவர் கெளவை எருவாக அன்னெசொல்
நீராக நீளுமிந் நோய்.
(1147)
விளக்கம்:

இக் காமநோயானது, ஊரவர் சொல்லும் பழிச்சொற்களெ எருவாகவும், அதுகேட்டு அன்னெ சொல்லும் கடுஞ்சொல்லெ நீராகவும் கொண்டு வளர்கின்றது.

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.
(1148)
விளக்கம்:

பழிச்சொல்லால் காமத்தைத் தணித்துவிடுவோம் என்று முயலுதல் நெய்யால் நெருப்பை அவிப்போம் என்பது போன்ற அறியாமைச் செயலாகும்.

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.
(1149)
விளக்கம்:

"அஞ்சாதே, பிரியேன்" என்று என்னெத் தெளிவித்துக் கூடியவர், இந்நாள் பலரும் நாண நம்மைக் கைவிட்டுப் போனபோது, அலருக்கு நாணவும் நம்மால்இயலுமோ

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை யெடுக்கும் இவ்வூர்.
(1150)
விளக்கம்:

யாம் விரும்புகின்ற அலரினெ இவ்வூரவரும் எடுத்துக் கூறுகின்றனர்; அதனால், எம் காதலரும் தாம் எம் உறவை விரும்பி வந்து எமக்கு அருளினெச் செய்வார்.

No comments:

Post a Comment