Sunday, May 31, 2009

113. காதல் சிறப்பு உரைத்தல்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்.
(1121)
விளக்கம்:

பணிவோடு பேசுகின்ற இவளது, வெண்மையான பற்களிடையே ஊறிவந்த நீரானது, பாலோடு தேனும் கலந்தாற்போல மிகுந்த சுவையினெ உடையதாகும்.


உடம்பொடு உயிரிடை என்னமற் றன்னந
மடந்தையொடு எம்மிடை நட்பு
(1122)
விளக்கம்:

இம் மடந்தைக்கும் எமக்கும் இடையிலுள்ள நட்பினது நெருக்கம், உடம்போடு உயிருக்கும் இடையேயுள்ள நட்பினது நெருக்கம் போன்றது ஆகும்.

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லெ இடம்.
(1123)
விளக்கம்:

கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீயும் போய் விடுவாயாக! யாம் விரும்புகின்ற அழகிய நுதலெ உடையாளுக்கு இருப்பதற்கான இடம் வேறு இல்லெ.

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னன் நீங்கும் இடத்து.
(1124)
விளக்கம்:

இந்த ஆயிழையாள் என்னுடன் இருக்கும்போது, என் உயிருக்கு வாழ்வைத் தருகின்றாள்; நீங்கும் போதோ அவ்வுயிருக்குச் சாதலெயே தருகின்றாள்.

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
(1125)
விளக்கம்:

ஒள்ளியவாய் அமர்த்த கண்களெ உடையவளின் குணங்களெ மறப்பதற்கே அறியேன்; அதனால், யான் அதை எப்போதாயினும் நினெப்பதும் செய்வேனோ !

கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
நுண்ணியர்எங் காத லவர்.
(1126)
விளக்கம்:

எம் காதலுக்கு உரியவர் எம் கண்களிலிருந்து ஒருபோதுமே நீங்கார்; எம் கண்களெ இமைத்தாலும் வருந்தார்; அவ்வளவு நுண்ணியவர் அவர்.

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து.
(1127)
விளக்கம்:

காதலுக்கு உரியவரான அவர் என் கண்ணிலேயே உள்ளனர்; ஆதலினாலே, அவர் மறைவாரோ என்று நினெத்து, என் கண்களுக்கு நான் மையும் எழுத மாட்டேன்.

நெஞ்சத்து காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
(1128)
விளக்கம்:

காதலர் என் நெஞ்சத்தில் நிறைந்திருக்கிறார். அதனால் அவருக்குச் சூடு உண்டாவதை நினைத்து, யாம் சூடாக எதனையும் உண்பதற்கும் அஞ்சுவோம்.

இமைப்பிற் கரப்பாக்கு அறிவில் அனெத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர்.
(1129)
விளக்கம்:

'இமைப்பின் அவர் மறைவார்' என்று, கண்களெ மூடாமலே துயிலொழித்துக் கிடப்போம்; அவ்வளவிற்கே, இவ்வூர் அவரை அன்பற்றவர் என்கின்றதே.

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர்.
(1130)
விளக்கம்:

எம் உள்ளத்துள்ளே அவர் உவப்போடு உள்ளார்; இருந்தும், பிரிந்து போய்விட்டார்; அதனால் அன்பில்லாதவர் என்றும் இவ்வூர் அவர்மேல் பழி கூறுகின்றதே!

No comments:

Post a Comment