Sunday, May 31, 2009

111. புணர்ச்சி மகிழ்தல்

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள.
(1101)
விளக்கம்:

கண்டும் கேட்டும் உண்டும் மோந்தும் தீண்டியும் அறிகின்ற ஐம்புல இன்பங்களும் ஒளிவீசும் வளையல் அணிந்த இவள் ஒருத்தியிடத்திலேயே அமைந்துள்ளன.


பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோயக்குத் தானே மருந்து.
(1102)
விளக்கம்:

நோய்க்கு மருந்தாக அமைவன வேறான பொருள்கள். அவ்வாறு இல்லாமல் அணி புனைந்த இவளால் நமக்கு வந்த நோய்க்கு, இவள் தானே மருந்தும் ஆயினாள்.

தாம்வீழ்ார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணுன் உலகு.
(1103)
விளக்கம்:

தாம் விரும்பும் மகளிரின் மென்மையான தோள்மேல் துயிலும் இன்பத்தைப் பேலாத் தாமரைக் கண்ணானின் போக உலகத்து இன்பமும் இனிதாக இருக்குமோ ?

நீங்கின் தொறூஉங் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.
(1104)
விளக்கம்:

தாம் தன்னை விட்டு விலகிச் சென்றால் சுடுதலும் , அருகில் நெருங்கினால் குளிர்தலுமாகிய நெருப்பை , இவள்தான் , எவ்விடத்திலிருந்து பெற்றுள்ளாளோ ?

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.
(1105)
விளக்கம்:

தாம் த விரும்பியபொழுது அவையவை தரும் இன்பத்தைப்போல இன்பம் தருவன, மலரணிந்த கூந்தலெ உடையவளான இவள் தோள்கள் தருகின்ற இன்பம்.

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.
(1106)
விளக்கம்:

அணைக்கும் போதெல்லாம், வாடிய என்னுயிர் தளிர்க்குமாறு தீண்டுதலால், இப் பேதையின் தோள்கள் அமிழ்தத்தால் அமைந்தவை போலும்.

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை மமுயக்கு.
(1107)
விளக்கம்:

தம் வீட்டிலிருந்து, தமக்குள்ள பகுதியை உண்ணும் இனிமை போன்றது, அழகிய மாமை நிறம் உடையவளான இவளெத்தழுவிப் பெறுகின்ற இன்பம் .

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
(1108)
விளக்கம்:

காற்றும் இடையிலே புகுந்து பிளந்துவிடாத இறுக்கமான தழுவுதல், விரும்பிக் கூடும் இருவருக்கும் இனிமைதரும் நல்ல இன்ப உறவாகும் .

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
(1109)
விளக்கம்:

ஊடலும், அதனெ அளவோடு அறிந்து தெளிவித்தலும், பின்னர்க் கூடுதலும், என்னும் இவை எல்லாம், காமம் பொருந்தியவர் தமக்குள் பெற்ற பயன்களாகும்.

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
(1110)
விளக்கம்:

ஒன்றை அறியும்போது, முன்னிருந்து அறியாமையைக் கண்டாற்போல, செறிவான சிவந்த அணிகளை உடையவளெச் சேருந்தோறும், காமஇன்பமும் உண்டாகின்றது.

No comments:

Post a Comment