Sunday, May 31, 2009

108. கயமை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
(1071)
விளக்கம்:

ஒளிப்பவர் " வடிவமைப்பால் கீழ்மக்களும் மக்களைப் போன்றிருப்பார்கள். அவரைப் போல ஒப்புமையான ஒன்றை வேறிரண்டு சாதிக் கண் யாம் எங்கும் கண்டதில்லை.


நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்.
(1072)
விளக்கம்:

தமக்கு உறுதியானவை இவை என்று அறிவாரைவிட அவை அறியாத கீழ்மக்கள் நன்மையுடையவர். அவர்போல் இவர் தம் நெஞ்சத்தில் கவலை இல்லாதவர் ஆதலால்.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
(1073)
விளக்கம்:

தேவரைப் போலவே தம்மை நியமிப்பவர் இல்லாமல் தாம் விரும்புபவன செய்து ஒழுகுதலால் கயவரும் தேவரும் ஒரே தன்மையுடையவர் ஆவர்.

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ்.
(1074)
விளக்கம்:

கீழ்மக்கள் தம்மிலும் கீழாக நடப்பவரைக் கண்டால் அந்தக் கீழ்மையில் தாம் அவருக்கு மேம்பட்டிருப்பதைக் காட்டித் தமக்குள் இறுமாப்பு அடைவர்.

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
(1075)
விளக்கம்:

"அரசால் துன்பம் வரும்" என்னும் அச்சமும் கீழ்மக்களது ஆசாரத்துக்குக் காரணம். அது ஒழிந்தால் விரும்பப்படும் பொருள் வரும்போது சிறிது உண்டாகும்.

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
(1076)
விளக்கம்:

கேட்ட மறைவான செய்திகளைப் பிறரிடம் தாங்கிக் கொண்டு போய்ச் சொல்வதனால் கீழ்மக்கள் செய்தியறிவிக்க அறையப்படும் பறை போன்றவர்கள் ஆவர்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கையர் அல்லா தவர்க்கு.
(1077)
விளக்கம்:

தம் கன்னத்தை நெரிப்பதாக வளைந்த கையினர் அல்லாதவருக்கு கீழ்மக்கள் தாமுண்டு கழுவிய ஈரக்கையைக் கூட உதற மாட்டார்கள்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற்
கொல்லப் பயன்படும் கீழ்.
(1078)
விளக்கம்:

குறையைச் சொன்னதும் இரக்கங்கொண்டு உதவுவதற்கு மேலோர் பயன்படுவார்கள். கரும்பைப் போல் வலியவர் நெருக்கிப் பிழிந்தால் கயவர் அவருக்குப் பயன்படுவர்.

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
(1079)
விளக்கம்:

குறையைச் சொன்னதும் இரக்கங்கொண்டு உதவுவதற்கு மேலோர் பயன்படுவார்கள். கரும்பைப் போல் வலியவர் நெருக்கிப் பிழிந்தால் கயவர் அவருக்குப் பயன்படுவர்.

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
(1080)
விளக்கம்:

ஒரு துன்பம் வந்துவிட்டால் அதுவே காரணமாகத் தம்மை விரைவில் பிறருக்கு விற்பதற்குக் கயவர் உரியவராவர். அதுவன்றி வேறு எத்தொழிலுக்கும் உரியவராகார்.

No comments:

Post a Comment