Showing posts with label 59. ஒற்றாடல். Show all posts
Showing posts with label 59. ஒற்றாடல். Show all posts

Sunday, May 31, 2009

59. ஒற்றாடல்

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
(581)
விளக்கம்:

ஒற்றர்களும், புகழ் அமைத்த அறநூலும் என்னும் இந்த இரண்டு பகுதியையுமே, ஒரு மன்னன் தனக்குரிய இருக்கண்களாகக் கொள்ளல் வேண்டும்.


எல்லார்க்கும் எல்லாம் நிகழ்வை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் துணை.
(582)
விளக்கம்:

எல்லாருக்கும் நிகழ்கின்ற எல்லாவற்றையும், எல்லாக்காலத்திலும், மிகவும் விரைவாக ஒற்றர் மூலம் அறிந்து கொள்ளுதல், வேந்தனுக்கு உரிய தொழிலாகும்.

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.
(583)
விளக்கம்:

பகைநாட்டு நிகழ்ச்சிகளை ஒற்றர் மூலமாகத் தெரிந்துக்கொண்டு, அவற்றின் பொருளையும் ஆராய்ந்து தெளியாத மன்னன், போரில் வெற்றி கொள்வதற்கு வழியே இல்லை.

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.
(584)
விளக்கம்:

அரசன் செயல்களைச் செய்பவர்கள், அரசனுக்கு உரிய சுற்றத்தினர், அரசனை விரும்ாபாத பகைவர், என்று சொல்லப்படும் அனைவயுைம் ஆராய்வதே, ஒற்றரின் கடமை.

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
(585)
விளக்கம்:

சந்தேகப்படாத மாற்றுருவுடன், எவருடைய பார்வைக்கும் அஞ்சாமல், அறிந்ததைத் தன் அரசனைத் தவிரப் பிறருக்கு வெளிப்படுத்தாமலிருக்க வல்லவனே ஒற்றன்.

துறந்தார் படிவத்த ராகி இறந்தாதாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.
(586)
விளக்கம்:

புகமுடியாத இடங்களுக்கும், துறவியர் வேடத்தோடு சென்று, அனைத்தையும் ஆராய்ந்து, எவர் யாது செய்தாலும் அதனால் சோர்வடையாதவனே ஒற்றன்.

மறந்தவை கேட்கவற் றாகி அறுந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
(587)
விளக்கம்:

மறைவான பேச்சுகளையும்கேட்டு அறியக்கூடிய திறமை உள்ளவனாகி, தான் அறிந்தவற்றில் எவிவிதச் சந்தேகமும் இல்லாதவனே நல்ல ஒற்றன்.

ஒற்றொற்றித தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
(588)
விளக்கம்:

ஓர் ஒற்றன் அறிந்து வந்து சொன்ன செய்தியையும், மற்றுமோர் ஒற்றனை ஏவி அறிந்து வருமாறு செய்து, உண்மையை ஒப்பிட்டு அறிதல் வேண்டும்.

ஒற்றொற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொல்தொக்க தேறப்படும்.
(589)
விளக்கம்:

ஓர் ஒற்றன் மற்றுமோர் ஒற்றனை அறியாதபடி பார்த்துக் கொள்வதோடு, இப்படி மூன்று ஒற்றர் சொல்வதையும் ஓருங்கே ஆராய்ந்தே உண்மை தெளியவேண்டும்.

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தா னாகும் மறை.
(590)
விளக்கம்:

பிறர் அறியும்படியாக ஒற்றனுக்குச் சிறப்புகளைச் செய்யக் கூடாது. செய்தால், மறைக்க வேண்டிய இரகசியத்தை அரசனே வெளிப்படுத்தினவன் ஆவான்.