Showing posts with label 110. குறிப்பறிதல். Show all posts
Showing posts with label 110. குறிப்பறிதல். Show all posts

Sunday, May 31, 2009

110. குறிப்பறிதல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து.
(1091)
விளக்கம்:

இவள் மையுண்ணும் கண்களில் இருவகைப் பார்வைகள் உள்ளன. ஒன்று, என்னிடத்து நோய் செய்யும் பார்வை. மற்றொன்று, அந்நோய்க்கு மருந்தாகும் பார்வை.


கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
(1092)
விளக்கம்:

என்னை அறியாமல் என்மேல் நோக்குகின்ற இவள் அறுகிய நோக்கமானது , காம உறவிலே சரிபாகம் ஆவதன்று , அதனிலும் மிகுதியானது ஆகும்.

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
(1093)
விளக்கம்:

அன்போடு என்னை நோக்கினாள்; பின் எதனையோ நினைத்தாள்போல நாணித் தலைகவிழ்ந்தாள்; அக்குறிப்பு,எங்களின் அன்புப்பயிருக்கு வார்த்த நீராயிற்று.

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
(1094)
விளக்கம்:

யான் தன்னைப் பாராதபோது என்னை நோக்கி அவள் மெல்ல நகுவாள்; யான் பார்க்கும்பொழுதோ எனக்கு எதிராகப் பாராள்; தலைகவிழ்ந்து நிலத்தையே பார்ப்பாள்.

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.
(1095)
விளக்கம்:

என்னையே குறிப்பாகக் கொண்டு பார்த்தல் அல்லாமலும் , தான் ஒரு கண்ணை , ஒருபக்கமாகச் சாய்த்தாள் போலவும் நோக்கி , தன்னுள்ளாகவே அவள் நகுவாள்.

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லெ உணரப் படும்.
(1096)
விளக்கம்:

புறத்தே நன்மை விரும்பாதவரைப்போலச் சொன்னாரானாலும் , தம் உள்ளத்தில் நம்மைச் சினவாதவரின் சொற்கள் பயனாகுதல் , விரைவில் உணரப்படும்.

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
(1097)
விளக்கம்:

நம்மை உள்ளத்திலே சினவாதவரின் சொல்லும் , சினந்தார் போலப் பார்க்கும் பார்வையும் , அயலார்போல் உள்ளத்திலுள்ள ஒரு குறிப்பாலே வருவன.

அசையியற்கு உண்டாண்டோர் ஏர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
(1098)
விளக்கம்:

நம்மை அவளை இரப்பதுபோல யான் பார்த்தபோது , அதனால் நெகிழ்ந்தவளாய் மெல்ல நகைத்தாள் ; அதனால் அசையும் இயல்பு உடையவளுக்கு நம்மைக் குறிப்பும் உண்டு.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள.
(1099)
விளக்கம்:

முன் அறியாதவரைப்போலத் தம்முள் பொதுநோக்காகவே ஒருவரையொருவர் பார்த்தலும் , தம் உள்ளத்திலே காதல் உடையவரிடம் காணப்படும் நன்மை ஆகும்.

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்
என்ன பயனும் இல.
(1100)
விளக்கம்:

காமத்திற்கு உரிய இருவருள் , ஒருவர் கண்ணோடு மற்றவர் கண்ணும் தம் நோக்கத்தால் ஒத்ததானால் , அவர் வாய்ச் சொற்களால் எந்தப் பயனுமில்லை.