Showing posts with label 117. படர்மெலிந்து இரங்கல். Show all posts
Showing posts with label 117. படர்மெலிந்து இரங்கல். Show all posts

Sunday, May 31, 2009

117. படர்மெலிந்து இரங்கல்

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
(1161)
விளக்கம்:

பிரிவுத்துன்பமான இந்த நோயை பிறர் அறியாதபடி மறைப்பேன். ஆனால் அஃது ஊற்று நீரைப் போல மென்மேலும் சுரந்து சுரந்து பெருகுகின்றதே.


சுரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.
(1162)
விளக்கம்:

காமநோயை ணிழுவதும் மூடி மறைக்கவும் ணிடியவில்லை, நோயைச் செய்த காதலருக்குத் தூது அனுப்புவதும் என் பெண்மைக்கு நாணம் தருகின்றதே.

காமணிம் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.
(1163)
விளக்கம்:

பிரிவுத் துயராலே நலியும் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு காமணிம் நாணணிம் இருபாலும் சம எடையாகத் தூங்குகின்றனவே.

காமக் கடன்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
(1164)
விளக்கம்:

காமமாகிய நோயும் கடலைப் போல பெருகியுள்ளது. அதைக் கடக்கும் தோணியாகிய காதலர்தாம் இப்போது நம்மோடு உடன் இல்லாமல் போயினர்.

துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
(1165)
விளக்கம்:

இனிமையான நட்புடைய நம்மிடமே துன்பத்தைச் செய்யும் நம் காதலர், பகையை வெல்வதற்கான வலிமை வேண்டும்போது, என்னதான் செய்வாரோ?

இன்பம் கடன்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
(1166)
விளக்கம்:

காம இன்பமானது அனுபவிக்கும்போது கடலளவு பெரிதாகியுள்ளது. ஆனால் பிரிவுத் துன்பத்தால் வருத்தும்போது அவ்வருத்தம் கடலை விடப் பெரிதாக உள்ளதே.

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
(1167)
விளக்கம்:

காமமாகிய கடும்புனலை நீந்திநீந்திக் கரை காணாமல் தவிக்கின்றேன். இந்த நள்ளிரவிலும் யான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடி உள்ளேன்.

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.
(1168)
விளக்கம்:

இந்த ராக்காலமும், எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்டு, என்னையன்றி யாரையும் இந் நள்ளிரவில் தனக்குத் துணையில்லாமல் உள்ளதே.

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.
(1169)
விளக்கம்:

பிரிவுத் துயராலே வருந்தும் போது மிக நீண்டது போலக் கழிகின்ற இரவுப் பொழுதானது, நம்மைப் பிரிந்து போன காதலரினும் மிகமிகக் கொடுமையானது.

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.
(1170)
விளக்கம்:

என் உள்ளத்தைப் போலவே, உடலும் , அவர் இருக்கும் இடத்திற்கு இப்போதே செல்ல முடிந்ததானால், என் கண்கள் இப்படிக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தாவே.