Showing posts with label 116. பிரிவாற்றாமை. Show all posts
Showing posts with label 116. பிரிவாற்றாமை. Show all posts

Sunday, May 31, 2009

116. பிரிவாற்றாமை

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்லரவு வாழ்வார்க் குரை.
(1151)
விளக்கம்:

பிரிந்து செல்லாமை உண்டானால் எனக்குச் சொல்வாயாக; பிரிந்துபோய் விரைந்து திரும்பி வருவது பற்றியானால், அது வரையிலும் வழ்ந்திருப்பவருக்குச் சொல்வாயாக.


இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தாற் புணர்வு.
(1152)
விளக்கம்:

அவர் அன்பான பார்வையும் முன்னர் இனிதாய் இருந்தது; இப்பொழுதோ, பிரிவை நினெத்து அஞ்சுகின்ற துன்பத்தால், அவர் கூடுதலும் துன்பமாகத் தோன்றுகின்றது.

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.
(1153)
விளக்கம்:

அறிவு உடையவரிடமும், தாம் காதலித்தவரைப் "பிரிவது" ஒரு சமயத்தில் உள்ளதனால், அவர், பிரியேன் என்று சொன்ன சொல்லெயும் என்னால் நம்ப முடியவில்லெ.

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.
(1154)
விளக்கம்:

அருள் செய்த காலத்தில், "அஞ்சாதே" என்று கூறி என் அச்சத்தைப் போக்கியவரே, இப்போது விட்டுப்பிரிவாரானால், அவரை நம்பிய நமக்கும் குற்றம் ஆகுமோ.

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.
(1155)
விளக்கம்:

என்னைக் காப்பதானால் காதலர் பிரியாதபடி தடுத்துக் காப்பாயாக. அவர் பிரிந்து போய்விட்டார் என்றால் மீண்டும் அவரைக் கூடுதல் என்பது நமக்கு அரிதாகும்.

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.
(1156)
விளக்கம்:

'பிரிவைப் பற்றிச் சொல்லும் கொடியவர் அவரானால்', அவர் மீண்டும் திரும்பி வந்து நமக்கு இன்பம் தருவார் என்னஉம் நம் ஆசையும், பயன் இல்லாததே .

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிறவா நின்ற வளை
(1157)
விளக்கம்:

நம்மை தலைவன் பிரிந்து போயினான் என்பதை, மெலிந்த நம் முன் கையிலிருந்து சுழலும் வளைகள் ஊரறிய எடுத்துக் காட்டி தூற்ற மாட்டவோ?

இன்னா தினனில்லூர் வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு .
(1158)
விளக்கம்:

தோழியர் எவருமே இல்லாத ஊரில் குடியிருப்பது மிகத் துன்பமானது, இனிய காதலரைப் பிரிந்து தனித்திருப்பது, அதை விட மிகவும் துன்பமானது.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ
(1159)
விளக்கம்:

தீ தன்னைத் தொட்டால் தான் சுடும். ஆனால், தலைவன் தலைவி பிரிந்து எத்தனைத் தொலைவில் இருந்தாலும் சுடும் ஆற்றல் கொண்டது காமநோய்.

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர்.
(1160)
விளக்கம்:

காதலர் பிரிவைப் பொறுத்து, அதனால் வரும் நலிவையும் விலக்கி, பிரிவுத் துயரையும் தாங்கி அதன் பின்னரும் உயிரோடு இருக்கும் மகளிர் உலகத்தில் பலர்.